Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "

Thursday, May 24, 2012

IPL இல் அதிஷ்டம் மிக்க சென்னை அணி





அதிஷ்டம் எப்பொழுதும் தோனியின் தலைமையிலான சென்னை அணிப் பக்கம் உண்டு.அது இந்த முறையும் IPL இல் போட்டியிலும் நடந்து விட்டது .PLAYOFF சுற்றுக்குள் நுழையுமா இல்லையா என்ற கேள்விக்கு பெங்களூர் அணி ,டெக்கான் அணியிடம் தோற்றதன் மூலம் விடை கிடைத்து விட்டது. முதல் மூன்று இடங்களுக்கு போட்டி அவ்வளவாக இல்லையெனினும் நான்காவது இடத்துக்காக போட்டி போட்ட அணிகளில் கடைசியில் டெக்கானின் புண்ணியத்தால் சென்னை PLAYOFF சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது. எட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை ,பெங்களூர் ,பஞ்சாப் அணிகளில் நிகர ஓட்ட சராசரியின் அடிப்படையில் +0.100 ஆக இருப்பதால் அதிர்ஷ்டத்தில் சென்னை PLAYOFF சுற்றுக்குள் நுழைந்து விட்டது.

இதன் பின்னர் நேற்று(23/05/2012) நடந்த போட்டியிலும் மும்பையை விழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழையக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி விட்டது சென்னைஅணி.இந்தப்போட்டியில் நீண்ட காலத்தின் பின் தோனி மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். இந்த IPL இல் பருவகாலத்தில் தோனியின் முதல் அரை சதம் இந்த போட்டியில் தான் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.இவர் வெறுமனே 20பந்துகளை மாத்திரம் சந்தித்து 51 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.அதே போல் பிராவோ 14 பந்துகளில் 33 ஓட்டங்களைக் குவித்தார்.இதன் படி மும்பைக்கு 188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நியமித்தது சென்னை.
எனினும் மும்பை அணியால் 149 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.இதன் படி 38 ஓட்டவித்தியாசத்தில் தோல்வியுற்றது மும்பை அணி. எதிர்வருகின்ற  வெள்ளிக்கிழமை(25/05/2012) அன்று இடம்பெறும் PLAYOFF சுற்றின் இரண்டாவது போட்டியில் டெல்லியுடன் விளையாட இருக்கிறது தோனியின் தலைமையிலான சென்னை அணி.ஆகவே எதிர்வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று இடம்பெறுகின்ற  PLAYOFF சுற்றின் இரண்டாவது போட்டியில் இந்த அதிஷ்டம்  போல் ஏதாவது அதிஷ்டம் கை கொடுக்குமா சென்னை அணிக்கு????

                                         


                                                          மும்பை அணியின் SCORE
                                     


சென்னைஅணியின் SCORE