Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "

Tuesday, June 5, 2012

என் மனதுக்கு பிடித்த பாடல்



என் மனதுக்கு பிடித்த பாடல்களில் என்றும் அன்புடன் படத்தில் வரும் பாடல் "துள்ளி திரிந்ததொரு காலம்" ரொம்பவும் அழகான பாடல். நேரடியான அர்த்தத்துடன் ஒரு ஆணின் வாழ்கையை முழுதாய் சொல்லும்.அதென்ன ஆணின் வாழ்கை? நான் நினைக்கிறேன் ஆணின் வாழ்கையானது யாரையும் சார்ந்து இருக்காதது.குழப்பங்களும்,திணறல்களும்,வழுக்கல்களும் நிறைந்தது தான் ஒரு  ஆணின் வாழ்கை.
ஆனால் பாடல் வரிகளில் வாழ்கையின் மொத்த சாரத்தையும் எழுதி இருப்பதாகவே படுகின்றது. மனதுக்கும்,வாழ்கைக்கும் மிக அருகில் இருக்கும் பாடல் இது

துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்              

அன்னை மடிதனில் சில நாள்,            
அதை விடுத்தொரு சில நாள் 
திண்ணை வெளியினில் சிலநாள்,
உண்ண வழி இன்றி சில நாள்
நட்பின் அரட்டைகள் சில நாள்,
நம்பித்திரிந்ததும் பல நாள்
கானல் நீரிலும் சில நாள்,
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்,
கையில் குழந்தையும் அதனால்
ஓடி முடிந்தது
காலங்கள் காலங்கள் பூங்கொடியே!


துள்ளும் அலையென அலைந்தேன்   
நெஞ்சில் கனவினை சுமந்தேன்
வாழ்கை பயணத்தை தொடந்தேன்
வானம் எல்லை என நடந்தேன்
காதல் வேள்விதனில் விழுந்தேன்
கேள்விக்குறி என வளைந்தேன்
உன்னை நினைத்திங்கு சிரித்தேன்
உண்மைக்கதை தனை மறைத்தேன்
பதில் சொல்லிட நினைத்தேன்
சொல்ல மொழி இன்றி தவித்தேன்.
வாழ்கின்ற வாழ்வெல்லாம்
நீர்குமிழ் போன்றது பூங்கொடியே!

இளையராஜா இசையில்,மனோவின்  குரலில் இந்த பாடல் பார்ப்பதற்கும்,கேட்பதற்கும்   நன்றாகவே இருக்கிறது .