அதனை அவர் உண்மையிலே தத்துரூபமாக நிரூபித்தும் விட்டார்.ஒரு சிறந்த கதையும் குறும்படம் தயாரிப்பது தொடர்பான ஊக்கமும் இருந்தாலே போதும் அதனை சிறப்பாக செய்வதற்கு.
இவரை பொறுத்தவரை இவரிடம் சிறந்த கதை அம்சமும் குறும்படம் தயாரிப்பது தொடர்பான ஊக்கமும் கூடுதலாகவே காணப்படுகின்றது.தன்னிடம் இருக்கும் ஒரு ஸ்மார்ட் கைபேசியினை வைத்து மிகச் சிறப்பாகவே செய்திருக்கின்றார் இந்த குறும்படத்தினை. ஒட்டு மொத்தத்தில் சொல்லப் போனால் மிகச்சிறப்பாக குறுகிய காலத்துக்குள்ளேயே செய்து முடித்திருக்கின்றார் விஜய்.உண்மையிலே இவரை பற்றி சொல்லப் போனால் இவரிடம் நிறைய ஊக்கம் இருக்கின்றது.
ஆனால் அதை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.இதற்கு முதலும் கூட அவர் சில குறும்படங்களை தயாரித்திருக்கின்றார்..ஆனால் வெளியிட்டிருக்கின்றாரா என்றால் இல்லை என்ற பதிலே வருகின்றது.காரணம் அவற்றை பிரபல்யப்படுதுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் கடந்த மாதமளவில் கூட அவர் ஒரு குறும்படத்தினை வெளியிட்டிருக்கின்றார்.அது தொடர்பாக நான் அப்பொழுது பணிபுரிந்த ஒரு ஊடகத்தில் இவ்வாறு தகவலை வெளியிட்டிருந்தேன்.
"மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடியில் பிறந்து தனது மண்ணுக்கு கலைத்துறையினூடாக பெருமை சேர்க்கின்றார் நாகேந்திரன் விஜயதாஸ். குறும்படத்துறை மூலம் தனது கலையுலக வாழ்க்கையை ஆரம்பித்திருக்கின்றார் இவர்.
இவருடைய நீண்ட கால எதிர்பார்ப்பே ஒரு குறும்படம் தயாரிப்பதே. அந்தக்கனவு அவருக்கு இப்பொழுது கைகூடியிருக்கின்றது. அவருடைய இரண்டாவது குறும்படமான கானல் எனும் குறும்படம் நாளைய தினம் (22.08.2014 வெள்ளிக்கிழமை) சக்தி டீவீ யில் ஒளிபரப்பாக இருக்கும் பேசும் படம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது.இலங்கை நேரப்படி நாளை இரவு 9.45pm மணிக்கு சக்தி டீவீ யில் நீங்களும் பார்த்து ரசிக்கலாம்"
இவர் இறுதியாக வெளியீட்டுள்ள Desire என்ற இந்த குறும்படமும் ஒரு நல்ல சிந்தனையோடு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தையாகவோ அல்லது பணக்கார குடும்பத்தில் பிறந்த குழந்தையாகவோ இருந்தாலும் அதன் எண்ணமும் செயற்பாடும் ஒன்று தான் என்பதை மிகவும் தத்துரூபமாக வெளிப்படுத்தியுள்ளார்.காட்சியமைப்பும் சிறப்பாகவேயுள்ளது.சில சில இடங்களில் சில நழுவல்கள் காணப்பட்டாலும் ஒட்டுமொத்தத்தில் சொல்லப்போனால் அருமையாகவே உள்ளது..ஏனென்றால் மிக குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட படம் அத்தோடு மட்டுப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்..ஒரு நல்ல முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை சகோதரர் விஜய் சொல்லியிருக்கின்றார்.நீங்களும் இவருடைய இவ் முயற்சிக்கு ஓரு பாரட்டுக் கொடுங்களேன்..வாழ்த்துக்கள் விஜய் உங்களுடைய இந்த முயற்சி இன்னும் தொடரட்டும்.