Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "

Wednesday, July 18, 2012

தமிழ் மொழியின் வளர்ச்சி



தமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும். இத்தமிழ் மொழிக்கு வரிவடிவம், அதாவது எழுத்து உருவம் என்று உருவானது? என்ற வினாவிற்கு சரியான விடை கிடைக்கவில்லை.  தற்சமயம்  நமக்குக்  கிட்டியுள்ள  ஆதாரங்களைக் கொண்டு சில மொழிவழி  உண்மையை உணர்கிறோம்.  இன்று  நாம்  பேசும்  தமிழ் மொழி பல கால  கட்டங்களில்  பல மொழிகளோடு  இணைந்து  பலஉருக்கள் மாறி  இறுதி  நிலையில்  காண்கிறோம்.  ஆனால்  தொல்கால  இந்திய  எழுத்து  முறையை ஆராய்ச்சியாளர்கள் தமிழெழுத்து முறை மற்ற இந்திய எழுத்து முறைகளைக்குத் தாய் பெருங்குரல் கொடுக்கிறார்கள் அறிஞர்கள் பலரும், ஐராவதம் மகாதேவன் அவர்களும்.





தமிழ் வட்டெழுத்து



வட்டெழுத்தின் தோற்றம்


வட்டெழுத்துக்களின் ஆரம்ப நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கு, நடுகற்களே சரியான சாட்சிகள். நடுகற்கள்,நடப்பட்ட கற்களைத் தான் நடுகற்கள் என்று வரலாற்று மேதைகள்  கூறுகின்றனர். அதன்வாயிலாகத் தமிழ் வட்டெழுத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. தமிழ் பிராமியில் புழக்கத்திலிருந்த “தமிழ்” எழுத்துக்கள் தான் தமிழ் வட்டெழுத்தாக மாறி வளரத் தொடங்கியது என வரலாற்றுஆசிரியர்கள் கருதுகின்றனர்.


கி.பி. 3  ஆம்  நூற்றாண்டு


கி.பி. 3  ஆம்  நூற்றாண்டிலிருந்து  வட்டெழுத்தானது  தமிழ்ப்  பிராமியிலிருந்து  பிரியத்தொடங்கியது. பிராமியிலிருந்து பிரியத் தொடங்கிய வட்டெழுத்துக்கள் நாளடைவில் சிறுகச் சிறுக வளர்ந்து கி.பி. 6 -ஆம்நூற்றாண்டில் தனித்தன்மை பெற்றது எனலாம்.


அன்று செந்தமிழ் நாடு எனப் போற்றப்பட்ட பாண்டிய நாடு “தன்னார் தமிழ் அளிக்கும் தென் பாண்டி நாடு” என மாணிக்கவாசகரால் பாராட்டப்பட்டது. தமிழை வளர்த்த பாண்டியர்கள் வட்டெழுத்து முறைக்கு ஊக்கம் காட்டினர். கொடுந்தமிழை மேற்கொண்ட சேரர்களும்  வட்டெழுத்தில் ஆர்வம் காட்டினர். இரு நாட்டிலும் வட்டெழுத்தில்  அரசுச்  சாசனங்கள்  எழுதப்பட்டன  என்றால் அதன் வளர்ச்சியைத் தெரிந்து கொள்ளுங்கள்.

வட்டெழுத்துப் பகுதிகள்


தமிழ் வட்டெழுத்து தமிழகம் முழுவதிலும் பரவிச் செயல்முறையில் இருந்தது. தமிழகப் பகுதிகளாகிய மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம்,  கோவை,  சேலம், வடாற்காடு,தென் ஆற்காடு, செங்கற்பட்டு  போன்ற  பகுதிகளிலும்  பரவியிருந்தது. கொங்கு நாட்டு  மன்னர்களின் சாசனங்களிலும்  தமிழ்வட்டெழுத்துக்கள்  காணப்படுகின்றன.

தமிழ்க்கோலெழுத்துக்கள் - மலையாண்மா


பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் பல நூற்றாண்டுகள் கொடி கட்டிப்பறந்த வட்டெழுத்துக்கள் நாள்பட நாள்பட அவை ஒழுங்கு முறையில் எழுதப்படாமல் உருமாற்றங்களைப் பெற்று தமிழ் வட்டெழுத்து ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. இவ்வெழுத்து முறையைத்தான் திருவாங்கூர் போன்ற கேரளப்பகுதிகளில் “மலையாண்மா” என்றும் “கோலெழுத்து” என்றும் அழைக்கலாயினர். சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வட்டெழுத்து  குறையத் தொடங்கியது. ஆனால் சேர நாட்டில்  கி.பி.  1663  வரை  நிலைத்திருந்தது என  திரு. டி.ஏ. கோபிநாதராவ் கூறுகிறார்.

வட்டெழுத்து வீழ்ச்சி


பாண்டிய நாட்டில் மிகச் செல்வாக்குடன் ஓங்கி வளர்ந்த பாண்டிய நாட்டை வென்ற  சோழர்கள் தமிழ் வட்டெழுத்துக்களை  ஆதரிக்கவில்லை.  முதலாம்  பராந்தகச் சோழன்  முதலாம் இராசராசன் காலம்வரையாண்ட சோழர்கள் வட்டெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கி.பி.12ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்து  பாண்டியர்  பகுதிகளில்  மறைந்துவிட்டது.


தமிழ்க் கிரந்தம் உதயம்

தென் இந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் வைத்தாண்ட சோழர்கள் காலத்தில்  தமிழ் வட்டெழுத்து மங்கி  கிரந்தத்  தமிழ்  மேலோங்கியது.  பல்லவர்களால்ப்  போற்றி  வளர்க்கப்பட்ட“பிராமிலிபி” யின்  வழிவந்த கிரந்தமும்,  அதனை  ஒட்டி  வளர்ந்த  கிரந்தத் தமிழும் வழக்காறு பெற்றது. சோழ மன்னர்களால்  போற்றி வளர்க்கப்பட்டது.  வட்டெழுத்துக்கள் மறைந்து கிரந்தத் தமிழ் தலை தூக்கியது.


தமிழ் இலக்கியங்கள்

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்” எனப் புகழப்படும் தமிழ்  உலகில்  பலவிலக்கியங்கள்  தற்பொழுது  தமிழகத்தில்  தமிழ் பற்றும்  புத்துணர்வும்,  மொழித் தூய்மையும், ஒழுங்கு முறை  எழுத்து  வடிவமைப்பும்  அமையக்  காரணங்களாக  அமைகின்றது.  இலக்கியங்கள்  அனைத்துமே பெரும்பாலும் 1. முதற்பொருள், 2. கருப்பொருள், 3.உரிப்பொருள், என வகைப் படுத்தப்பட்டுள்ளன.





நம் தமிழ் மொழி இலக்கிய வளம் பெற்ற மொழியாகும்.  இலக்கியங்களும் இலக்கண நூல்களும் பெருகி இருந்தமையால்  தமிழ்மொழி  திருந்திய  மொழியாக,  திருத்தம்  செய்யப்பட்ட  மொழியாக,  ஒழுங்குபடுத்தப்பட்ட  மொழியாகச்  சிறப்புற்றது.  இலக்கண  மரபுகளைத் தகுத்து ஒழுங்குபடுத்தி  “எழுத்து”, “சொல்”, “பொருள்”  என்ற  மூன்று  தலைப்புக்கள்  ஒலியைக்  குறிக்கும்  குறில்,  நெடில்,  ஆய்தம்,  இகரம்,  உகரம்  போன்ற அனைத்துத்  தமிழ் இலக்கண நெறிகளை நாம் அறிவோம்.

தமிழ் மொழியின் நான்கு நிலைகள்


1. பண்டைத் தமிழ் நிலை
2. காப்பியக்காலத் தமிழ் நிலை
3. இடைக்காலத் தமிழ் நிலை
4. தற்காலத் தமிழ் நிலை


என நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள், பண்டையத் தமிழை அறியத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் உதவுகின்றன.


இடைக்காலத் தமிழை அறியத் தேவாரம், திவ்யப்பிரபந்தம், சிந்தாமணி போன்ற  இலக்கியங்கள் உதவுகின்றன.


தற்காலத் தமிழ்நிலையை, நன்னூலுக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் மற்றும் பேச்சு வழக்கு தமிழ் கொண்டும் தெரிய முடிகிறது.


ஒலியாகத் திரிந்து, சித்திரமாய் மாறி, பலமொழிகளுடன் இணைந்து உருக்கள் பலப், பல  எடுத்து,காலம் பலகடந்து, கல்வெட்டுகளில் உராய்ந்து, செப்பேடுகளிலும் ஓலைச் சுவடிகளிலும் தோய்ந்து,வெள்ளைக் காகிதத்தில்  வீரநடை போடும்  தேன்தமிழ்  மொழியே  நம்  தாய்த் தமிழ்.


என்றும் மழலையாய்,  குன்றாச் சிறப்புடன்  தேன்  சுவையொத்த, தமிழாம் கன்னியை  முன்னோன்  தன்கருவினில்  சுமந்து,  மகவாய்  ஈன்று, மழலையாய் வளர்த்து, குமரியாய்ப் போற்றிக்காத்து நம்மிடம் விட்டுச்சென்றான். அன்னவள் விரிந்த கூந்தலை வாரிப் பின்னலிட்டு, மலர் வைத்து அன்புடன் அழகு  பார்த்தல் நம்கடமையல்லவா? அழகு பார்க்க எவரும் துணியாதது ஏன்?என்பதுதான்  புதிராக  உள்ளது.



ஃ - அக் என்னும் ஆயுத எழுத்து
அகரக்குறிலொலி துவக்கத்திலெழுப்ப
இக்கென மெய்யொலி இறுதியில் முடிக்க
அக்கென எழும்புமாயுத ஒலியை
மும்முற்றுப்புள்ளிகளெங்கனம் ஒலிக்கும்?
ஒலியே! இல்லா பிற ஒலி திருடும்
அவல நிலையைப் போக்கலாமெண்ணி
மும் முற்றுப் புள்ளியை நீக்கலும் சரியே!

நன்றி
கதிர்  blogspot
-              பெ.சிவராமன்
                           பெரியார் மீடியா யுனிட் கைல்புறோன் ஜெர்மனி