Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "

Wednesday, July 11, 2012

கிரிக்கெட் உலகுக்கு விடை கொடுத்த Keeping Gloves


உலகின் மிகச்சிறந்த விக்கெட் காப்பாளர்களில் முக்கியமானவரும், தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக பல ஆண்டுகள் திகழ்ந்தவருமான மார்க் பவுச்சர் வருத்ததுடனும், வலியுடனும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். 


Mark Boucher



இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆபிரிக்கா அணி அங்குள்ள உள்ளூர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சக வீரர் இம்ரான் தாஹீர் சோமர்செட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஜீமாலை ஆட்டமிழக்க செய்த போது ஸ்டெம்பில் இருந்த Bails கீப்பிங் செய்து கொண்டிருந்த பவுச்சரின் கண்ணை தாக்கியது. கருவிழியில் காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் தவிர்க்க முடியாமல் தனது முடிவை அறிவித்துள்ளார். இனி Ab de Villiers கீப்பிங் செய்வார் என எதிர்பார்க்கலாம்.


Mark Boucher injury

எந்த ஒரு கலையாக இருந்தாலும் மைல்கல் என்பது சந்தோசம் தரக்கூடியது தான். அனைத்து தர கிரிக்கெட்டையும் சேர்த்து 999 பேரை ஆட்டமிழக்க செய்த மார்க் பவுச்சர் இந்த இங்கிலாந்து தொடரில் 1000 வீரர்களை ஆட்டமிழக்க செய்த  முதல் வீரர் என்ற மைல்கல்லை தொடுவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் விதி விளையாடியதில் ஒரு எண்ணில் அந்த மைல்கல்லை தவறவிட்டு விட்டார். மிகச்சிறந்த விக்கெட்காப்பாளர் க 1997ல் இருந்து சுமார் 15 வருடங்கள் தென் ஆபிரிக்க அணிக்காக டெஸ்ட்,ஒரு நாள், T20 என சகல விதமான ஆட்டங்களிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். அனைத்து வகையான ஆட்டங்களையும் சேர்த்து 10469 ஓட்டங்கள்  அடித்துள்ள பவுச்சர் 999 பேரை CATCH மற்றும் STUMPING மூலம் ஆட்டமிழக்க செய்துள்ளார். மிகச்சிறந்த துடுப்பாட்வீரராக வலம் வராவிட்டாலும் MIDDLE ORDER ல் தனது வேலையை சரியாக செய்து வந்துள்ளார். 


Mark Boucher Records

35 வயதில் ஓய்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்று தான் என்றாலும் கண்ணில் பட்ட காயம் விரைவில் குணமாகி வரட்டும்.