Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "

Thursday, July 12, 2012

மிரட்ட போகும் பில்லா – 2


ஈழப் புரட்சிக்கு நிதியுதவி அளிக்கும் கேரக்டரில் அஜீத்குமார், பில்லா 2 படத்தில் நடித்திருப்பதாக ஒரு பரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது. அஜீத் நடிப்பில் ஏற்கனவே வெளியான பில்லா ரீமேக், அவருக்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது.இந்த நிலையில் தற்போது அதன் 2ம் பாகத்தை எடுத்துள்ளனர். ஆனால் இது முதல் படத்தின் தொடர்ச்சி அல்ல, மாறாக, எப்படி ஒரு சாதாரண மனிதன் பில்லா என்ற தாதாவாக மாறினான் என்பதைப் பார்க்கும் கதையாக இது மாற்றப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை இதுதான் என்று ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


1983ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் ஹொலிவுட் படம் Scarface. சூப்பர் ஸ்டார் அல் பசினோ நடித்த படம். அட்டகாசமாக ஓடிய திரில்லர் கிரைம் படம் இது. கதை ரொம்பச் சின்னது… கியூபாவிலிருந்து அகதியாக மியாமிக்கு வந்து சேருகிறார் அல் பசினோ. அங்கு அவருக்கு கொகைன் கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்படுகிறது. பின்னர் ஒரு நாள் அந்தக் கும்பலுக்கேத் தலைவனாகி விடுகிறார் அல் பசினோ. அதன் பின்னர் அவரிடம் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இந்தப் பணத்தை அப்படியே கியூபாவுக்கு அனுப்புகிறார். அங்கு அரசுக்கு எதிரான புரட்சிக்கு பணத்தை தாராளமாக கொடுத்து உதவுகிறார்.
இந்தப் படத்துக்கு அப்போது கியூப மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக மியாமியில் வசித்து வந்த கியூப மக்கள் பெரும் போராட்டங்களிலெல்லாம் குதித்தனர். கியூப மக்களை போதைப் பொருள் கடத்தல்காரர்களாக சித்தரிப்பதா என்று வரிந்து கட்டி எழுந்தனர். ஆனால் படம் சூப்பர்  ஹிட் ஆனது. அதை விட அல் பசினோவின் அட்டகாசமான நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

Scarface படத்தின் கதையைத்தான் பில்லா 2 படமாக மாற்றியுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. பில்லா 2ல், இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதியாக வருகிறார் டேவிட் பில்லா, அதாவது நம்ம அஜீ்த். இங்கு வந்த பிறகு அவர் சூழ்நிலை காரணமாக தாதாவாகிறார். பின்னர் தனது நாட்டில் நடக்கும் புரட்சிக்கு உதவி செய்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதே போன்று  இந்திய திரைப்பட வரலாற்றில் முதன்முதலாக உன்னத உயர் தொழில்நுட்பம் ஒன்று பில்லா 2 இல் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இந்திய அளவில் முதன் முதலாக ரெட் எபிக் கமெரா தொழில்நுட்பம் மூலம் பில்லா 2 படக்கப்பட்டுள்ளது.

அதி துல்லியமான காட்சித் தெளிவினை வழங்கும் ரெட் எபிக் தொழில்நுட்பம் மூலம் பில்லா 2 திரைப்படத்தின் காட்சிகள் மெருகு பெற்றுள்ளன.

அதேபோல் இசை. யுவன் ஷங்கர் ராஜாவின் தீம் மியூஸிக் ஏற்கனவே பெரிய ஹிட். எங்கே இதனை ஒலிக்கவிட்டாலும் ரசிகர்கள் பரவசமாகிவிடுகின்றனர். அதேபோல் பாடல்களும் பிரபலமாகியுள்ளன. கோவா, ஹைதராபாத், ஜோர்‌ஜியா என்று பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

இந்த உற்சாகங்களுக்கு மத்தியில் ‘தல’ ரசிகர்களின் ஒரே சோகம், சென்சார் போர்ட் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தது தான்…!