Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "

Monday, July 2, 2012

ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றது

நேற்று ஞாயிற்றுக்கிழமை(02/07/2012) இடம்பெற்ற யூரோ கோப்பை இறுதி போட்டியில் இத்தாலியை வீழ்த்தி ஸ்பெயின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

 உக்ரேய்னின்  கியெவ் மைதானத்தில் இடம்பெற்ற இப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஸ்பெயின் அணி 4-0 என இத்தாலியை வெற்றிகொண்டது. இதன் மூலம் இரண்டாவது தடவையாக தொடர்ந்து யூரோ சாம்பியன் பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளதுடன், நடப்பு உலக கோப்பை சாம்பியன், நடப்பு யூரோ கோப்பை சாம்பியன் உலகின் NO-1 அணியென தன்னை மீண்டும் நிரூபித்துள்ளது.ஸ்பெயின் அணியில் முதல் 11 பேர் அணியில் பெப்ரிகாஸ் இடம் பெற்றார்.இத்தாலி அணியில் எந்த பெரிய மாற்றமும் இல்லை.ஜெர்மனிக்கு எதிராக விளையாடிய அதே வீரர்களே இந்த ஆட்டத்திலும் களம் இறங்கினர்.


                     ஆரம்பம் முதலே ஸ்பெயின் அதிரடியாக விளையாடியது.இதனால் 14வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோலை அடித்து இத்தாலிக்கு அதிர்ச்சியை அளித்தது.மைதானத்தின் வலது பக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட மைனஸ் டிகிரியில் இருந்து பெப்ரிகாஸ் கிராஸ் செய்த பந்தை மான்செஸ்டர் சிட்டி வீரர் டேவிட் சில்வா தலையால் முட்டி கோலுக்குள் அடித்தார்.இந்த கோல் மூலம் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.தொடர்ந்து 41வது நிமிடத்தில் ஸ்பெயின் அடுத்த கோலை போட்டது.நடுகளத்தில் இருந்து சேவி செய்த பாஸை பெற்ற ஜோர்டி ஆல்பா அதனை மிக நேர்த்தியாக கோலாக மாற்றினார்.முதல் பாதியில் ஸ்பெயின் 2-0 என்று முன்னிலை பெற்றது. பிற்பாதியில் ஆன்டனியோ காசோனாவுக்கு பதிலாக 34 வயது அனுபவமிக்க உடினிஸ் ஸ்டிரைக்கர் ஆன்டானியோ டி நடாலி களம் இறக்கப்பட்டார்.இறங்கிய உடனே மிக அருமையாக ஒரு ஹெடிங் செய்தார்.ஆனால் ஸ்பெயின் கோல்கம்பத்துக்கு சற்று மேலே சென்றதால் கோலாகவில்லை.இரு கோல்கள் பின்தங்கிய நிலையில் இத்தாலி வீரர்கள் கோல் அடிக்க கடும் போரட்டம் நடத்தினர்கள்.ஆனால் ரியல்மாட்ரிட் கோல்கீப்பர் இகெர் கேசிலாஸ் இத்தாலி வீரர்களின் கோல் முயற்சிகளை தகர்த்து எறிந்து விட்டார். பின்னர் மாற்று ஆட்டக்காரராக இறங்கிய ஸ்பெயின் வீரர் பெர்னான்டோ டார்ரஸ் தன் பங்குக்கு 84வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.ஸ்பெயின் அணிக்காக டார்ரஸ் அடிக்கும் 31வது சர்வதேச கோல் இதுவாகும்.முதல் சுற்று லீக் ஆட்டத்தில் இத்தாலியிடம் கடும் பாடு பட்ட ஸ்பெயின் இறுதி ஆட்டத்தில் இத்தாலியை உண்டு இல்லை என்று ஆக்கியது.ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் 88வது நிமிடத்தில் ஸ்பெயின் 4வது கோலை அடித்தது.பெர்னான்டோ டார்ரஸ் பாஸ் செய்த பந்தை ஜுவான் மாத்தா வலைக்குள் தள்ள ஆட்ட நேர இறுதியில் ஸ்பெயின் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.ஐரோப்பிய கோப்பை வரலாற்றில்   முதல் முறையாக 4 கோல் அடித்து ஸ்பெயின் கோப்பையை கைப்பற்றியது புதிய சாதனை ஆகும்.இதற்கு முன் 1972ம் ஆண்டு மேற்கு ஜெர்மனி சோவியத் யூனியன் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. இதனால் இத்தாலி ரசிகர்களுக்கும் பலத்த ஏமாற்றமே மிஞ்சியது. கோப்பை ஸ்பெயின் அணிக்கு வழங்கப்பட்டதும், இத்தாலி ரசிகர்கள் மாத்திரமல்லாது இத்தாலி அணியின் வீரர்களும் கண்கலங்கிய காட்சிகள் மைதானத்தை உணர்ச்சிகரமாக்கியது.

         ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டி கடந்த ஜுன் மாதம் 8ஆம் திகதி போலந்து மற்றும் உக்ரேனில் தொடங்கியது.இந்த போட்டியில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த முன்னணி 16 அணிகள் பங்கு பெற்றன. இதில் C பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியன் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.அரை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் போர்ச்சுகல் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வலுவான ஜேர்மனி அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டி நேற்று உக்ரேனின் கீவ் நகரில் நடைபெற்றது.
மேலும் 2008ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை 2010 உலக கோப்பை மீண்டும் 2012 ஐரோப்பிய கோப்பை என 3 முக்கிய போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையும் ஸ்பெயின் அணிக்கு கிடைத்தது.ஐரோப்பிய கோப்பையை ஸ்பெயின் அணி வெல்வது இது 3வது முறை ஆகும்.இதற்கு முன் 1964,2008ம் ஆண்டுகளில் ஸ்பெயின் கோப்பையை கைப்பற்றியுள்ளது.