Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "

Sunday, July 22, 2012

இலங்கையில் களுவாஞ்சிகுடி

ஆசியக் கண்டத்தில் அரும் பெரும் தீவு
பேசுதற்கினிய பெருவள இலங்கை
முடி மன்னர் ஆண்ட முதிசச் சொத்து
குடி மக்கள் ஆளும் குடியரசு நாட்டில்
வங்கக் கடல்தான் வாழ்த்தொலி பரப்ப
சங்கத் தமிழ்தான் தான் நின்றிலங்கும்
கிழக்கெனக் கூறும் கிழக்கு மாகாணத்தில்
வழக்குகள் மாறா வழி வழி நடக்கும்
பட்டணமான பழம் பெரும் பதியாம்
மட்டக்களப்பு மாநகர் தனிலே


வித்தக ஆசான் விபுலானந்தன்
முத்தென ஆய்ந்த முறைகளில் ஒன்றும்
வான் பருந்து அள்ளி வளங்கொழிக்கின்ற
மீன் இசை பாடும் மட்டு நல் வாவி
தெற்கு நோக்கிச் செல்லுமிடத்தில்
கற்ற்வர் நிறைந்த களுவாஞ்சிகுடிதான்
கல் பதினாறாம் கட்டையில் உள்ள
நெல் வயல் நிறைந்த நீர் நிலையூராம்
பட்டிகள் பெருகி பால் தயிர் பெருகும்
பட்டிருப்புத் தொகுதியின் கேந்திர நிலையம்


~நன்றி ~

கலைச் செம்மல்,
மரபுக் கலை வேந்தன்,
விஷவைத்தியர்,
கலாபூஷணம் 
திரு.இரா.அரசகேசரி