Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "

Friday, July 20, 2012

ரபேல் நடால் ஒலிம்பிக்கிலிருந்து விலகினார்

சர்வதேச டென்னிஸ் நட்சத்திரம் என்று ரசிகர்களால் புகழப்பட்ட  26 வயதான ஸ்பெயின் டென்னிஸ் வீரர்  ரபேல் நடால் ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.எதிர்வரும் 27ம் திகதி லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் நடாலின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான நடால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வில் ஸ்பெய்ன் நாட்டு தேசிய கொடியை ஏந்திச் செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடியபோது ஏற்பட்ட தசைப் பிடிப்புக்கள் இன்னும் பூரண குணமாகாத நிலையில், போதிய உடற்தகுதியின்மையால் தன்னால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று அவர் அறிவித்துள்ளார். அவருக்கு இடது காலில் மூட்டுவலி பிரச்சினை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
           
 எனினும் அண்மையில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டிகளில் 2ஆம் சுற்றில் தோல்வியடைந்த ரபேல் நடால், 2ஆம் இடத்திலிருந்து 3ஆம் இடத்திற்கும் பின் தள்ளப்பட்டுள்ளார்.இந்த விம்பிள்டன் போட்டிகளில் அவர் 100 வது இடத்திலிருந்த லூகாஸ் ரோசொலிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியிருந்தார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்த இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் சோகமான நாள். என்னுடைய வாழ்நாள் லட்சியமான, ஒலிம்பிக்கில் கொடியேந்திச் செல்லும் அரிய வாய்ப்பை இப்போது இழந்துள்ளேன்.

இது எவ்வளவு கடினமானது என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்´ என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார் நடால். பெய்ஜிங் ஒலிம்பிக்கில் நடால் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4-ம் திகதி ஸ்பெயின் தலைநகரில் நடைபெற்ற காட்சிப் போட்டியில் பங்கேற்கவிருந்த நடால், முழங்கால் காயம் காரணமாக அதிலிருந்து விலகியதும் குறிப்பிடத்தக்கது.