Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "

Saturday, December 29, 2012

ஓய்ந்தது கணீர் என்ற கம்பீரக் குரல்


கிரிக்கெட் வர்ணனை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த கிரிக்கெட் வர்ணனையின் பிதாமகன் ரொனி கிரெய்க் தனது 66 ஆவது வயதில் இன்று இயற்கை எய்தினார். புகழ்பெற்ற நேர்முக வர்ணனையாளரான இவர் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார்.


அவுஸ்ரேலியாவிலுள்ள தனது இல்லத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார். தென்னாபிரிக்காவில் பிறந்து இங்கிலாந்து சார்பாகக் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிய ரொனி கிரெய்க், அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வந்தார். இலங்கையில் இடம்பெற்ற உலக டுவென்டி டுவென்டி தொடரில் இறுதியாகக் கடமையாற்றிய அவர், அதன் பின்னர் அவுஸ்ரேலியாவிற்குத் திரும்பிய போது நுரையீரல் புற்றுநோயால் தாக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புற்றுநோய்க்கான சிகிச்சைகளை அவர் பெற்று வந்த போதிலும், இன்று அவரது வீட்டில் வைத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.




அவர் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போதிலும், அவர் மரணமடைந்தார். குறிப்பாக இவர் இலங்கை  ரசிகர்களால்   பெரிதும் விரும்பி நேசிக்கப்படுகின்றார்.இவருடைய  குரல் வளமும் இவருக்கே உரித்தான  கிரிக்கெட் வர்ணனையின் தனித்துவ பாணியுமே இவரை ஒரு கணம் திரும்பி பார்க்க வைத்த காரணிகளாகும் 


 இங்கிலாந்து சார்பாக 58 டெஸ்ற் போட்டிகளில் பங்குபற்றிய ரொனி கிரெய்க், 40.43 என்ற சராசரியில் 3599 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இதில் 8 சதங்களும், 20 அரைச்சதங்களும் அடங்குகின்றன. இதன்போது 32.20 என்ற சராசரியில் 141 டெஸ்ற் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய அவர், 6 ஐந்து விக்கெட் பெறுதிகளையும் பெற்றிருந்தார். டெஸ்ற் போட்டிகள் தவிர, அவர் 22 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபற்றியிருந்தார்.கிரிக்கெட் வர்ணனையினை  பொறுத்தவரை இவருடைய  இழப்பு  ஈடுசெய்ய முடியாததொன்றாகும்.


                 Tony Greig - Last Interview, Very Emotional, Talks about Cancer


                                           1969 இல்  எடுக்கப்பட்டது