Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "

Thursday, December 6, 2012

கிரிக்கெட் உலகுக்கு விடை கொடுத்தார் : ரிக்கி பொன்டிங்


அவுஸ்திரேலிய - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் பேர்த்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவரும், உலகில் தோன்றிய மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான றிக்கி பொன்டிங் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.இவருடைய  ஓய்வானது ,எம்மை போன்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு உணர்ச்சிகரமான தருணமாக மாறியது.


167 டெஸ்ற் போட்டிகளில் பங்குபற்றியுள்ள றிக்கி பொன்டிங் 52.21 என்ற சராசரியில் 13,366 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.இவற்றில் 41 சதங்களும், 62 அரைச்சதங்களும் உள்ளடங்குகின்றன.தற்போதைய நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக அதிகபட்சமான டெஸ்ற் ஓட்டங்களைக் கொண்டுள்ள வீரராக றிக்கி பொன்டிங் காணப்படுகிறார்.ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 375 போட்டிகளில் பங்குபற்றிய றிக்கி பொன்டிங் 30 சதங்கள், 82 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 42.03 என்ற சராசரியில் 13,704 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக அதிக ஒருநாள் சர்வதேசப் போட்டி ஓட்டங்களைக் கொண்டுள்ளவராக  றிக்கி பொன்டிங் காணப்படுகிறார்.



முதலிரு டெஸ்ட் போட்டிகளையும் சமநிலைப்படுத்திய அவுஸ்திரேலிய அணி மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 225 ஓட்டங்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 569 ஓட்டங்களும் எடுத்தது. அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 163 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 322 ஓட்டங்களையும் மாத்திரமே எடுத்து தோல்வி அடைந்தது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிக்கி பொன்டிங் தனது முதல் இன்னிங்ஸில் 7 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 8 ஓட்டங்களையும்,  மாத்திரமே எடுத்தார். இந்த டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியிலும் அவரால் பிரகாசிக்க முடியாது போனது துரதிஷ்டம். இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட அரங்கில் உள் நுழைந்த போது தென்னாபிரிக்க வீரர்கள் வரிசையாக இரு மருங்கிலும் நின்று கைதட்டி அவரை வரவேற்றனர்.  மைதான அரங்கிற்கு றிக்கி பொன்டிங்கின்  மனைவியும் வந்திருந்தார்.




றிக்கி பொன்டிங்ஆட்டமிழந்த போது மைதானத்திலிருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி பொன்டிங்கிக்கு பிரியாவிடை கொடுத்தனர். 'Thanks Ricky' எனும் கோஷங்கள் ஒலித்துக்கொண்டிருக்க, பொன்டிங் உணர்ச்சிவசமாக அரங்கிலிருந்து வெளியேறினார்.