
உதிரத்தை பாலாக்கி பத்து மாதம் சுமந்து
தரணியில் தவழ விட்டவளும் நீயே
உயிர் கொடுத்து உலகினில்
உலாவ விட்டவளும் நீயே....
தாய் தன் மகவை மழலையாய்
பார்ப்பது இயல்பு ...
நான் கல்லூரி முடிந்து
தாமதித்து வீடு திரும்பும்
நேரம் நெஞ்சை நெருப்பாக்கி
வீட்டின் முன்னோ, வீதி முற்றத்திலோ,
காத்திருக்கும் என் உயிர் ஜீவன் நீ தானே
தாயே நீ தான் எந்தன் உலகமே !!!!!