Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "

Saturday, July 28, 2012

லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் ~ 2012

முழு உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிரம்மாண்ட 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் கிழக்கு லண்டனிலுள்ள ஸ்ட்ராட் போர்ட் ஒலிம்பிக் பூங்காவில் பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் இன்று(28/07/2012)  அதிகாலை பொழுதில் ஆரம்பமானது.



சுமார் 75 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த நிகழ்வுகளை கண்டுகளிப்பற்காக லண்டன் பார்க் விளையாட்டரங்கில் குழுமியிருந்தனர்.டு டி பிரான்ஸ் சைக்கிளோட்ட பந்தயத்தில் முதலிடம் பெற்ற பிரட்லீ விக்கின்ஸ் பாரம்பரிய மணியோசையை எழுப்பியதை அடுத்து கண்கவர் வகையில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டரங்கில் ஆரம்பமான அங்குரார்ப்பண வைபவத்தின் தொனிப்பொருளாக ஆச்சரியம்மிக்க நாடு என்ற பதம் அமைந்திருந்தது..பிரிட்டனின் அமைதியான கிராமப்புற சூழலை காட்டும் காட்சிகளுடன் தொடங்கிய தொடக்கவிழா பின்னர் அதன் பல பரிமாணங்களின் வளர்ச்சியை காட்டியது.



உலகெங்கும் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் படங்களின் தாக்கமும் தொடக்க விழாவில் இருந்தது. பிரிட்டிஷ் அரசி எலிசபெத் ஜேம்ஸ் பாண்டுடன் ஒரு ஹெலிகொப்டரில் பறந்து விளையாட்டு அரங்குக்கு வருவது போன்ற காட்சி திரையிடப்பட்டது.அந்த ஒளிக்காட்சியில் ஹெலிகொப்டரிலிருந்து, பர சூட் மூலம் அரசியும் ஜேம்ஸ் பாண்டுமாக நடித்த நடிகர்கள் அரங்கினுள் குதிப்பதைக் காட்டும் காட்சியை அடுத்து, எலிசபெத் அரசியும், இளவரசர்  பிலிப்பும் சிறப்பு நுழைவாயில் வழியாக அரங்குக்குள் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.ஒலிம்பிக் விளையாட்டில் இன்னும் கிரிக்கெட் இடம்பெறாவிட்டாலும், பிரிட்டனின் பாரம்பரியத்தை காட்டும் ஒரு பகுதியாக, கிரிக்கெட் விளையாட்டு இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டு ஆட ஆரம்பிக்கப்பட்ட கட்டத்தையும் வெளிக்காட்டும் வகையில் ஒரு சிறு பகுதியும் துவக்க விழாவில் இடம்பெற்றது.பிரபல நகைச்சுவை நடிகரான ரோவான் அட்கின்ஸன்(MR BEEN), லண்டன் சிம்பனி இசைக்குழுவுடன் பங்குபெறும் ஒரு அம்சமும் தொடக்க விழாவில் இருந்தது.




தொடக்க விழாவின் முதல் பகுதியாக கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்ற பிறகு, பங்கேற்கும் நாட்டு அணிகள் அகர வரிசைப்படி அரங்கினுள் வந்தனர். அங்குரார்ப்பண வைபத்தில் இலங்கையின் தேசியக் கொடியினை இலங்கை வீரர்கள் குழுவின் தலைவர் நிலூக்க கருணாரத்ன ஏந்திச் சென்றார்.ஒலிம்பிக் மரபின்படி, முதல் நாடாக கிரேக்கமும், கடைசியாக போட்டிகளை நடத்தும் பிரிட்டனும் தமது அணிகளுடன் அரங்கில் நுழைந்தனர்.


அதே வேளை ஒலிம்பிக் சுடரை ஏற்றுவதற்காக அதனை மைதானத்திற்கு சேர் ஸ்ரிவ் ரெட்க்றோவ் ஏந்திவந்தார். எனினும் இறுதி வரை ஏற்றுவது யார் என்பதில் இரகசியம் பேணப்பட்டது.ரெட்க்றேவிடம் இருந்து ஒலிம்பிக் சுடரை பொறுப்பேற்ற பிரித்தானியாவின் ஏழு இளம் வீர வீராங்கனைகளை அதனை ஏற்றியமை விசேட அம்சமாகும்.சம்பிரதாய உரைகளுக்கு பிறகு, லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை எலிசபெத் அரசி முறைப்படி தொடங்கிவைத்தார்.
ஒலிம்பிக் போட்டி வரலாற்றியில் லண்டன் மூன்றாவது முறையாக இந்த விழாவினை முன்னின்று நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 10 ஆயிரத்து 500 வீர வீராங்கனைகள் பங்குபற்றுகின்ற ஒலிம்பிக் விழாவின் இன்றைய போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகியது.