Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "

Monday, August 6, 2012

உலகின் மிக வேகமான மனிதர்

உலகின் மிக வேகமான மனிதர் என்ற பெயரை உலக சாதனையாளரும், 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவருமான ஜமைக்காவின் குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட் மீண்டும் பதிவு செய்துள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியின், ஆடவர் 100மீற்றர் ஓட்டப்போட்டியில்  தங்கப்பதக்கத்தை வென்றதன் மூலம் போல்ட் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார். போட்டித் தூரத்தை 9.63 விநாடிகளில் நிறைவுசெய்த போல்ட் புதிய ஒலிம்பிக் சாதனையையும் நிலைநாட்டியமை விசேட அம்சமாகும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சக ஜமைக்கா வீரரான யோஹன் பிளேக் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.


நேற்று இரவு  இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் 3 அரையிறுதிப் போட்டிகளிலிருந்து 8 வீரர்கள் தெரிவானார்கள்.ஒவ்வொரு அரையிறுதியிலிருந்தும் தலா 2 வீரர்கள் நேரடியாகத் தெரிவானதோடு, மிகுதி 2 வீரர்களும் ஏனைய வீரர்களில் வேகமாக ஓடியதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்.முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் ஜஸ்டின் கட்லின் 9.82 செக்கன்களில் ஓடி முதலிடத்தையும், நெதர்லாந்தின் சுரன்டி மார்ட்டினா 9.91 செக்கன்களில் ஓடி இரண்டாவது இடத்தையும் பெற்று நேரடியாகத் தெரிவாகினர்.ஜமைக்காவின் அஸாஃபா பவல் 9.94 செக்கன்களில் ஓடி நேரடித் தெரிவாகாமல் வேகமாக ஓடும் 2 வீரர்களில் ஒருவராகத்  பின்னர் தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜமைக்காவின் உசைன் போல்ட் 9.87 செக்கன்களில் ஓடி முதலிடத்தையும், ஐக்கிய அமெரிக்காவின் ரயன் பெய்லி 9.96 செக்கன்களில் ஓடி இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டதோடு, ட்ரினாட் அன்ட் ரொபாக்கொவின் ரிச்சட் தொம்ப்ஸன் 10.02 செக்கன்களில் ஓடி செக்கன்கள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்.
மூன்றாவது அரையிறுதியில் ஜமைக்காவின் யோஹன் பிளேக் 9.85 செக்கன்களில் ஓடி முதலிடத்தையும், ஐக்கிய அமெரிக்காவின் ரைசன் கே 9.90 செக்கன்களில் ஓடி இரண்டாவது இடத்தையும் பெற்று தெரிவாகினர்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் மிக வேகமாக  ஓடிய உசைன் போல்ட் 9.63 செக்கன்களில் ஓடி ஒலிம்பிக் சாதனையைப் படைத்தோடு தங்கப் பதக்கத்தையும் வென்றார்.அவருக்குப் பெரும்போட்டியாகக் கருதப்பட்ட சக ஜமைக்கா வீரர் யோஹன் பிளேக் 9.75 செக்கன்களில் ஓடி வெள்ளிப் பதக்கத்தையும், ஐக்கிய அமெரிக்காவின் ஜஸ்டின் கட்லின் 9.79 செக்கன்களில் ஓடி வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.


ஐக்கிய அமெரிக்காவின் ரைசன் கே 9.80 செக்கன்களிலும், ஐக்கிய அமெரிக்காவின் மற்றொரு வீரரான றயன் பெய்லி 9.88 செக்கன்களிலும், நெதர்லாந்தின் சரன்டி மார்ட்டினா 9.94 செக்கன்களிலும், ட்ரினாட் அன்ட் ரொபாக்கோவின் ரிச்சட் தொம்ப்ஸன் 9.88 செக்கன்களிலும், ஜமைக்காவின் அஸாஃபா பவல் போட்டியின் போது காயமடைந்து 11.99 செக்கன்களிலும் 100 மீற்றரை ஓடி முடித்தனர்.












இந்த வீடியோவை பார்க்க WATCH ON YOUTUBE என்பதை CLICK செய்யவும்